வெளியிடப்பட்ட நேரம்: 07:58 (29/03/2017)

கடைசி தொடர்பு:08:09 (29/03/2017)

பிரதமர் வேட்பாளர் ஆகிறார் நிதிஷ் குமார்!?

nithish kumar

2015-ல் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று, பீகார் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ் குமார், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபட இருக்கிறார். 2019-ல் தற்போதைய பிரதமர் மோடியின் பதவிக்காலம் முடிகிறது. இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கவிருக்கிறார்.

இதுகுறித்து, ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித்தொடர்பாளர் பாரதி மேத்தா, '2019 ல் நடக்கும் பிரதமர் தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் பீகார் முதல்வரான நிதிஷ் குமாரை அறிவிக்க இருக்கிறோம்' என்று கூறினார். மேலும், அனைத்து மத சார்பற்ற அமைப்புகளும் நிதிஷை ஆதரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சிப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகள், மதுவிலக்கு என பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை பீகாரில் நிதிஷ் குமார் செயல்படுத்தியுள்ளார். மேலும், பீகாரில் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் ஏழு அம்ச திட்டங்கள், பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகித இடஒதுக்கீடு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளார். எனவே, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பிரதமராக்க, அனைவரும் ஆதரவு தர வேண்டும் எனவும் பாரதி மேத்தா கூறியுள்ளார்.