ஜோதிடர்களின் தேர்தல் கணிப்பு: தேர்தல் ஆணையம் தடை

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை  தேர்தல் தொடர்பான ஜோதிடர்களின் கணிப்புகளை வெளியிட, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

 

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம்  ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது, ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவின்போதும், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்போதே, சில தொலைக்காட்சிகள்,  முடிவுகள் குறித்து, ஜோதிடர்களை வைத்து கணிப்புகளை வெளியிட்டன. இதுகுறித்து, தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் கமிஷன், இதுபோன்ற கணிப்புகளுக்குத் தடை விதித்துள்ளது. 

இதுகுறித்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தலின்போது கருத்துக்கணிப்புக்குத் தடை விதிக்கப்பட்ட காலத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுநர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடுவது சட்டதுக்குப் புறம்பானது. அப்படி வெளியிடும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!