நான் அவனில்லை!- அலறும் மற்றொரு கெய்க்வாட்

’கெய்க்வாட்’ என்ற பெயர்க் காரணத்தினாலே ஒவ்வொரு முறையும் விமானப் பயணத்தில் சங்கடங்களை சந்திப்பதாகக் கூறியுள்ளார் பா.ஜ.க. எம்.பி. சுனில் கெய்க்வாட்.

sunil

விமான ஊழியரைத் தாக்கிய சம்பவத்தால் பல விமான நிறுவனங்களும் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் பெயரை தடை செய்திருந்தனர். இந்தத் தடையால் ‘கெய்க்வாட்’ என்ற பெயர்கொண்ட  பா.ஜ.க எம்.பி. சுனில் கெய்க்வாட் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளார்.

அதே மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுனில் கெய்க்வாட் மஹாராஷ்டிராவின் லத்தூர் தொகுதியின் பா.ஜ.க எம்.பி.யாக உள்ளார். ‘கெய்க்வாட்’ என்ற பெயருக்காகவே பல கட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவிடம் புகார் அளித்துள்ளார். 

எங்கு சென்றாலும் தன் பெயரால் பல சங்கடங்களை சந்தித்த சுனில் கெய்க்வாட், தன்னை பார்லிமெண்ட் உறுப்பினர்கள் கூட தவறாகப் புரிந்துகொண்டு கேள்வி கேட்பதாக பலரிடமும் புலம்பி வருகிறார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!