வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (31/03/2017)

கடைசி தொடர்பு:18:49 (31/03/2017)

ஆவணப்படம், செயலி அறிமுகம் என அசத்தும் திருப்பதி தேவஸ்தானம்

உலகம் முழுவதிலுமிருந்தும் அதிகமாக பக்தர்கள் வருகை தரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் குறித்த ஆவணப்படம் சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் வெளியிடப்பட்டது. மேலும் கோயில் குறித்த அத்தனை தகவல்களையும் பக்தர்கள் அறிவதற்காக புதிய செயலியும் அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது.

thirupati


திருப்பதி கோயிலின் ஆதி வரலாறு, விழாக்கள் எனப் பல சிறப்புகளையும் தொகுத்து ‘Inside Tirumala Tirupati' என்ற ஆவணப்படத்தை நேஷனல் ஜியாகிரஃபி தொலைக்காட்சி ஆறு மாத காலம் கோயிலிலே தங்கியிருந்து படமாக்கி தேவஸ்தானத்துடன் இணைந்து வெளியிட்டது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தற்போது உகாதி திருநாளில் ‘கோவிந்தா திருமலை தேவஸ்தானம்’ என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது திருப்பதி தேவஸ்தானம். இந்தச் செயலியின் மூலம் சுவாமி தரிசன முன்பதிவு, கோயில் நடைமுறைகள், தங்கும் வசதி, போன்ற அனைத்துத் தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியை டிசிஎஸ் நிறுவனத்தார் வடிவமைத்துள்ளனர். இதனை கோயிலின் இணையதளத்திலோ, கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தோ பக்தர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

 

உ.சுதர்சன் காந்தி

மாணவப் பத்திரிக்கையாளர்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க