முதல் பெண் போர் அதிகாரி..! | First woman combat officer in BSF

வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (31/03/2017)

கடைசி தொடர்பு:09:14 (01/04/2017)

முதல் பெண் போர் அதிகாரி..!

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் 51 ஆண்டு கால வரலாற்றில், முதல்முறையாக ஒரு பெண், போர்ப்பிரிவு அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

tanu

இந்திய நாட்டின் மிகப்பெரிய எல்லைப் பாதுகாப்புப் படையில்... ஒரு பெண், போர் அதிகாரியாகப் பதவியேற்பது இதுவே முதல்முறை. 25 வயதான தனுஸ்ரீ பரிக், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2014-ம் ஆண்டில் நடந்த யூபிஎஸ்சி தேர்வில் தேர்வாகி, தற்போது பயிற்சியை நிறைவுசெய்தவருக்கு, மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

2013-ம் ஆண்டிலிருந்து எல்லைப் பாதுகாப்புப் படையில் உயர் அதிகாரிகளாக பெண்களைத் தேர்வுசெய்துவருகின்றனர். முதல் பெண் போர் அதிகாரியாக அறிவிக்கப்பட்டிருக்கும் தனுஸ்ரீ, பஞ்சாப் எல்லையிலுள்ள இந்தோ-பாகிஸ்தான் எல்லையில் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.