வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (01/04/2017)

கடைசி தொடர்பு:07:40 (01/04/2017)

சிறுமிகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தினால் மரண தண்டனை!

'சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க, புதிய சட்டம் நிறைவேற்றப்படும்' என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

 

 

'சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழிசெய்யும் வகையில், புதிய சட்டத்தை மத்தியப்பிரதேச அரசு விரைவில் கொண்டுவரும்' என, மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். இதற்கான சட்ட மசோதா, வருகிற சட்டசபைக்  கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டதும், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க