வரலாற்றிலேயே முதன்முறையாக நிதி மசோதாவுடன் இணைந்து வரிவிதிப்பு திட்டம் தாக்கல் | Finance bill- 2017 came into existence along with taxation proposals from day 1

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (01/04/2017)

கடைசி தொடர்பு:18:08 (01/04/2017)

வரலாற்றிலேயே முதன்முறையாக நிதி மசோதாவுடன் இணைந்து வரிவிதிப்பு திட்டம் தாக்கல்

2017-ம் ஆண்டுக்கான நிதி மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுடன் நிதியாண்டின் முதல் நாளிலேயே நடைமுறைக்கு வந்தது. வரலாற்றிலேயே முதன்முறையாக நிதி மசோதாவுடன் இணைந்து வரிவிதிப்பு திட்டமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

arun

நிதி மசோதாவில் முக்கிய திட்டங்களாக இரண்டு லட்சத்துக்கு மேலான பணப் பரிவர்த்தனையில் கட்டுப்பாடு, வரி வருமானத் தாக்கலில் ஆதார் எண் இணைப்பு ஆகிய விதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் பல ஆண்டுகால நடைமுறையை மாற்றி முதன்முறையாக பிப்ரவரி 1-ம் தேதியே பட்ஜெட் தக்கல் செய்யப்பட்டது. முன்னர் பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், ஒப்புதல் பெற்று, நடைமுறைக்கு வர தாமதமாகும். தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலும் உடனே பெறப்பட்டதால் நிதியாண்டின் முதல் நாளே மசோதா நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், புதிய நடைமுறையாக நிதி பட்ஜெட்டுடன் இணைந்து ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மசோதா- 2017-ல் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை வரிவிதிப்புகள் மற்றும் இதர திட்டங்கள் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்தே நடைமுறைக்கு வருமென வருவாய் செயலாளர் அதியா தெரிவித்தார்.
 


[X] Close

[X] Close