'மாட்டைக் கொன்றால் தூக்கில் போடுவேன்..!'- சத்தீஸ்கர் முதல்வர்

Raman Singh

சில நாட்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்தில், மாட்டைக் கொல்பவருக்கு வாழ்நாள் தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் என்று பெயரிடப்பட்டது. மேலும், பா.ஜ.க பதவியேற்றுள்ள மாநிலங்களில் மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வருவதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. 

உத்தரப் பிரதேசத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள பா.ஜ.க தலைமையிலான ஆட்சியும், சட்டவிரோதமாகச் செயல்படும் இறைச்சிக் கூடங்களுக்குத் தடை விதிக்கும் நடவடிக்கையை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், 'மாட்டைக் கொன்றால் தூக்கில் போடுவேன்' என்று கூறியுள்ளார். 

உத்தரப்பிரதேசத்தில், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் இறைச்சிக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று கூறப்பட்டதையடுத்து, பா.ஜ.க ஆளும் ராஜாஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இறைச்சிக்கூடங்கள் மூடப்பட வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து எழுந்துவருகின்றன. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!