சஞ்சய் தத் விடுவிப்பு பற்றி ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பும் பேரறிவாளன்! | Perarivalan filed second RTI plea in Pune seeking to know grounds for Sanjay Dutt's release

வெளியிடப்பட்ட நேரம்: 21:28 (01/04/2017)

கடைசி தொடர்பு:21:28 (01/04/2017)

சஞ்சய் தத் விடுவிப்பு பற்றி ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பும் பேரறிவாளன்!

1993-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஐந்து ஆண்டுகள் தண்டனை பெற்று சிறை சென்றவர் நடிகர் சஞ்சய் தத். அவர், தனது சிறைத் தண்டனையை முழுவதுமாக முடிப்பதற்கு முன்பே பரோலில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே சஞ்சய் தத் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டார் என்ற ரீதியில் புனேவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம், பேரறிவாளன், புனேவில் இருக்கும் எரவாடா சிறைக்கு, இதே போன்றதொரு கேள்வியை ஆர்.டி.ஐ மூலம் எழுப்பி இருந்தார். இந்த ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்போது பதில் மறுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார் பேரறிவாளன்.