இந்தியா, மலேசியா இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ஆறு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் நஜிப், மோடி முன்னிலையில் இந்தியா- மலேசியா இடையிலான ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  இதில், வெவ்வேறு துறைகள் சார்ந்த ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.


கடந்த  சில நாள்களுக்கு முன் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு அதிகாரிகள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை சந்தித்த மலேசிய பிரதமர், பிறகு டெல்லி சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். இதற்குப் பின்பு இரு நாட்டுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிகழ்வில் அவர் கலந்து கொண்டார். 

அப்போது, 'பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு தன்னை கவர்ந்திருப்பதாகவும் இரு நாடுகளும் இணைந்து பரவி வரும் தீவிரவாதத்தை அழிக்கவேண்டும்' என அவர் கூறியுள்ளார். மேலும், 'ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக இருவரும் கைகோத்து போராட வேண்டும்' என அவர் குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் மோடி தனது உரையில், 'தீவிரவாதத்துக்கு எதிராக மலேசியா போராடி வருவது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது' என்று கூறியுள்ளார். மேலும், 'உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட கொள்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவோம்' என தெரிவித்துள்ளார் மோடி. இதையடுத்து, ராஜஸ்தான் செல்லும் பிரதமர் நஜிப் ரசாக், அம்மாநில முதல்வர் வசுந்தராவை சந்திக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!