மானிய விலை சிலிண்டர், விலை உயர்வு! | Subsidy gas-cylinder price hiked by Rs 5.57

வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (02/04/2017)

கடைசி தொடர்பு:10:26 (03/04/2017)

மானிய விலை சிலிண்டர், விலை உயர்வு!

cylinder

மானியத்தில் வழங்கப்படும் சிலிண்டரின் விலையை 5.57 ரூபாய் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது. 14.2 கிலோ எடைகொண்ட வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களுக்கு மத்திய அரசு பெரும்பாலும் மானியம் வழங்கிவருகிறது. 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர்கள், மானியம் இல்லாமலும் வழங்கப்பட்டுவருகின்றன.

தற்போது மத்திய அரசு, மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலையை 5.57 ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் மானியம் இல்லாமல் வழங்கப்படும் சிலிண்டரின் விலையை 14.50 ரூபாய் குறைத்துள்ளது. தற்போது மானிய விலை சிலிண்டர் 440.50 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.