’அனைவருக்கும் தரமான மாட்டிறைச்சி கிடைக்கச் செய்வேன்’ : பா.ஜ.க வேட்பாளரின் வாக்குறுதி!

 பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், பசுவதை புரிவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், கேரள  மாநிலம், மல்லப்புரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ், மாட்டு இறைசிக்கு ஆதரவாக கருத்துக் கூறியுள்ளார்.

Sreeprakash
 

மல்லப்புரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ், 'எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், மக்கள் அனைவருக்கும் தரமான மாட்டிறைச்சி கிடைக்கச்செய்வேன். நான் வெற்றிபெற்றால், அனைத்து தரப்பினருக்கும் தடையின்றி மாட்டி றைச்சி கிடைக்க வழிசெய்வேன்’ எனக் கூறி, வாக்கு சேகரித்து வருகிறார். 

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், பசுவதைக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. உ.பி, ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், இறைச்சிக் கூடங்களுக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், 'பசுவதை புரிவோரை தூக்கிலிடுவேன்' எனக் கூறியிருந்தார். இதையடுத்து, நாடு முழுவதும் பா.ஜ.க-வின் பசு பாதுகாப்பு கொள்கைகள் விவாதங்களைக் கிளம்பியுள்ளன,
இந்நிலையில், பா.ஜ.க வேட்பாளரான ஸ்ரீபிரகாஷ், மாட்டிறைச்சிக்கு ஆதரவாகப் பேசிவருகிறார். பா.ஜ.க-வின் கொள்கைக்கு எதிராக அவர் பேசி, வாக்கு சேகரித்துவருவது ஆச்சர்யமளிக்கிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!