தெற்காசியாவின் நீளமான சுரங்கப்பாதை! மோடி திறந்துவைத்தார்

தெற்காசியாவின் மிக நீளமான சுரங்கப் பாதையான சேனானி- நஷ்ரி சுரங்கப்பாதையை, பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

இன்று காஷ்மீர் சென்ற பிரதமர் மோடியை, முதலமைச்சர் மெஹபூபா முப்தி வரவேற்றார். அதற்குப் பின், சுரங்கப்பாதை திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு, சேனானி-நஷ்ரி சுரங்கப்பாதையைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி. மேலும், சுரங்கப்பாதையில், சில மைல் தூரம் அவர் பயணம்செய்தார். பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மெஹபூபா முப்தி, நிதின் கட்கரி, ஜிதேந்திர சிங் உள்ளிட்டோரும் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ' இந்தத் திட்டத்தின்மூலம் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் சரக்குப் போக்குவரத்து மேம்படும்' என்றார். ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் பனிச்சரிவு மற்றும் மணல் சரிவுகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், இனி சுரங்கப்பாதையின் வழியாக சிரமமற்ற பயணத்தை மக்கள் மேற்கொள்ளலாம் எனவும் மாநில அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று உதம்பூரில் நடக்கும் பேரணியில், பிரதமர் மோடியுடன் மெஹபூபா முப்தியும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில், மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹரியத் அமைப்பின் சார்பில் கடையடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!