மதுக்கடைகள் மூடலால், 10 லட்சம் பேருக்கு வேலை இழப்பு - நிதி ஆயோக் தலைவர் கவலை!

amitab kant

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவால், 10 லட்சம் பேர் வேலையிழக்க நேரிடும் என்று நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 'தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டன. ஸ்டார் ஓட்டல்களிலும் மது வகைகள் விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 50,000 கடைகள் வரை மூடப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஸ்டார் ஓட்டல் உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்ற ரீதியில், திட்டமிட்டுவருகின்றனர்.

இந்நிலையில், நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த், 'சுற்றுலா என்பது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஏன் அதைக் கொல்ல வேண்டும்? உச்ச நீதிமன்றம் மதுக்கடைகளை அகற்றக் கூறிய உத்தரவால், 10 லட்சம் பேர் வரை வேலை இழக்கலாம்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு ஆதாரமாக, ஆங்கிலச் செய்திக் கட்டுரைகளையும் இணைத்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!