வெளியிடப்பட்ட நேரம்: 05:42 (03/04/2017)

கடைசி தொடர்பு:05:42 (03/04/2017)

மனிதநேயத்தால் வங்கதேசத்தை நெகிழவைத்த ஏர் இந்தியா!

இந்தியாவின் தேசிய விமான நிறுவமான 'ஏர் இந்தியா' தனது மனிதநேய செயல்பாடு மூலம் வங்கதேசத்தை நெகிழவைத்துள்ளது.

வங்கதேச நாட்டில்  உள்ள ஒரு கிராமம் மெஹர்பூர். அங்கே  பழம் வியாபாரம் செய்யும் டோஃபஸல் ஹூசைன் என்பவருக்கு அப்தஸ்(24), ராஹினுல்(14) என இரண்டு மகன்கள். இருவருமே பிறந்தது முதல் தசைநார் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்காக தன்னால் இயன்ற வரை மருத்துவம் பார்த்து சோர்ந்துபோனார் டோஃபஸச் ஹூசைன். இந்நிலையில் ஷோரப் என்ற அவரது எட்டு வயது பேரனுக்கும் அதே  குறைபாடு இருப்பதைப் பார்த்து  நொந்துபோனார். 

ஏர் இந்தியா

இதற்கு மேல் அவர்களுக்கு சிகிச்சை  அளிக்க தன்னிடம் பணம் இல்லை. எனவே, மூன்று பேரையும் கருணைக் கொலை செய்ய அனுமதி வேண்டும் என தன் நாட்டு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார் ஹூசைன்.

இதையறிந்த மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, அவர்களுக்கு உதவ முன்வந்து அழைப்பு விடுத்தது. அவர்களும் வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு வந்துவிட்டனர். ஆனால், மும்பைக்குச் செல்ல போதுமான பணம் இல்லை. மருத்துவர் ஒருவர் மூலம் இந்த விஷயத்தை அறிந்த ஏர் இந்தியா நிறுவனம், அவர்களுக்கு உதவ முன் வந்தது. 

''அந்த மூன்று பேருடன் மேலும் மூன்று பேர் மும்பைக்குச் செல்வதற்கும் சிகிச்சை பெற்று மீண்டும் திரும்புவதற்கும் விமானத்தில் இலவச பயணம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம்'' என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

 - கே.யுவராஜன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்