6-வது நாளாகத் தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!

lorries strike

சுங்கச்சாவடி கட்டண உயர்வு, காப்பீட்டுத் தொகை உயர்வு ஆகியவற்றை எதிர்த்து, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம், இன்று 6-வது நாளாகத் தொடர்கிறது.

2017-18-ம் ஆண்டுக்கான நிதியாண்டில் இருந்து, சுங்கச்சாவடி கட்டணம், வாகனங்கள் காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதை எதிர்த்து, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் ஏப்ரல் 30-ம் தேதி, வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.  நேற்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
சுங்கச்சாவடி கட்டண உயர்வு, காப்பீட்டுத் தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சர் ஏதும் உறுதியளிக்காததால், போராட்டம் தொடர்கிறது. லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்வதால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!