இந்துஸ்தானி பாடகி, கிஷோரி அமோன்கர் காலமானார் - பிரதமர் மோடி அஞ்சலி!

kishori amonkar

மும்பையைச் சேர்ந்த பழம்பெரும் இந்துஸ்தானி இசைப் பாடகி கிஷோரி அமோன்கர் காலமானார். அவரது மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

1932-ம் ஆண்டு பிறந்த கிஷோரி அமோன்கர், இந்துஸ்தானி இசையில் தவிர்க்க முடியாத நபராக விளங்கினார். கிஷோரியின் தாயார் மோகுபாய் குர்திகரும் மிகச் சிறந்த பாடகி. அவரிடம் இருந்துதான் கிஷோரிக்கு இந்துஸ்தானி இசையின் மீது தீவிர ஆர்வம் ஏற்பட்டது. இசை உலகின் மிக முக்கியமான நபராக விளங்கிய கிஷோரிக்கு, 1987-ம் ஆண்டு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. அதன்பிறகு, 2002-ம் ஆண்டு, நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதும் கிஷோரிக்கு வழங்கப்பட்டது.

கடந்த வாரம் வரை கச்சேரியில் பாடிவந்த அவர், திடீரென உடல்நலக் குறைபாட்டினால் நேற்றிரவு உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திரநாத் பட்னாவிஸ், மகாராட்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கிஷோரியின் மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள  பிரதமர் மோடி, 'இந்துஸ்தானி பாடகி கிஷோரியின் இழப்பு இசை உலகில் ஈடுசெய்ய முடியாதது' என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!