தலாய் லாமா-வின் அருணாச்சல் வருகையில் திடீர் மாற்றம்!

அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள ‘தாரா’ புத்தமத ஆலய குடமுழுக்கு விழாவுக்கு, இன்று வருகைதருவதாக இருந்த தலாய் லாமா-வின் பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

லாமா

இமயமலைப் பகுதிகளில் உள்ள மோசமான வானிலை காரணமாக, பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என, புத்த மதத் தலைவரின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, தவாங் பகுதியில் தங்கியிருக்கும் தலாய் லாமா, சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் சிறப்பு போதனைக் கூட்டங்கள் நிகழ்த்திவிட்டு, தாரா ஆலயம் செல்வார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகள், 1962-ல் இந்தோ-சீனப் போரின்போது, சீனாவிடமிருந்து இந்தியா மீட்ட பகுதிகளாகும். ஆனால், சீனா இன்னும் அந்தப்பகுதியின் மீது உரிமை கோரி வருகின்றது.

1959-ம் ஆண்டு, சீனாவுக்கு எதிரான திபெத்திய எழுச்சியின்போது, திபெத்துக்குச் சென்றவர் தலாய் லாமா. தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த மாநிலத்துக்கு வந்துள்ளார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!