மருத்துவமனையில் ரியோ நாயகி

ரியோ ஒலிம்பிக்ஸ்- 2016-ல் பதக்கம் ஏதும் வெல்லாவிட்டாலும் ரியோ பதக்கக் கனவை முதன்முதலாக விதைத்து இந்திய மக்கள் மனங்களில் நாயகியாக உயர்ந்து நின்றவர் தீபா கர்மாகர். காயம் காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீபா

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தீபா கர்மாகர், 2016-ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்ஸ் மூலம் ஜிம்னாஸ்டிக்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் பெண் ஆவார். அடுத்த மாதம் தாய்லாந்தில் நடக்கவிருக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காகப் பயிற்சி மேற்கொண்டிருந்தார். பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் மும்பையிலுள்ள மருத்துவமனையில் தீபா அனுமதிக்கப்பட்டிருந்தார். சச்சின் டெண்டுல்கருக்கு சிகிச்சை அளித்த பிரபல மருத்துவர் டாக்டர். அன்ந்த் ஜோஷி தீபாவுக்கு சிகிச்சையளித்து வருகிறார். 

மூட்டு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தீபா, தற்போது நலமுடன் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மே 2017ல் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தீபா பங்கேற்க முடியாமல் போனது இந்தியாவுக்கு இழப்புதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!