சீனாவுக்கு கிரண் ரிஜ்ஜு எச்சரிக்கை! | Kiran rijiju condems china not to interfere in indian affairs

வெளியிடப்பட்ட நேரம்: 22:32 (04/04/2017)

கடைசி தொடர்பு:09:56 (05/04/2017)

சீனாவுக்கு கிரண் ரிஜ்ஜு எச்சரிக்கை!

இன்று, அருணாச்சலப்பிரதேசத்துக்கு வருகை புரிந்தார் தலாய் லாமா. அவரது  வருகையை சீனா எதிர்த்தது. சீனாவின் எதிர்ப்புக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு எச்சரிக்கை விடுத்துள்ளார். 'சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதில்லை. அதுபோல இந்திய உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிட வேண்டாம்' என்று அவர் எச்சரித்துள்ளார்.

அருணாச்சல முதல்-மந்திரி பெமாகண்டுவின் அழைப்பின் பேரில், திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா அருணாச்சலப்பிரதேசம் செல்வதை சீனா எதிர்த்து வந்தது. தலாய் லாமாவின்  பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டால், இரு தரப்பு உறவில் கடும் பாதிப்பு ஏற்படும் என சீனா எச்சரித்தது. ஆனால், இந்த விவகாரத்தில், இந்திய அரசு சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்து, தலாய் லாமா அருணாச்சலப்பிரதேசம் செல்வதை உறுதிசெய்தது. இதுகுறித்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறுகையில், 'தலாய் லாமாவின் அருணாச்சல் பயணம் முற்றிலும் மதம் சார்பானது. இதற்கு, அரசியல் சாயம் கொடுக்க வேண்டாம்', என்றார். மேலும், 'சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட்டது கிடையாது. அதேபோன்று இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்திலும் சீனா தலையிடாது என எதிர்பார்க்கிறோம்' என்று கூறியுள்ளார்.
திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி, கட்டுப்பாட்டில்வைத்துள்ள சீனா, அருணாச்சலப்பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி, உரிமை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.