வட மாநிலத்தவர்களுக்கு வால்பிடிக்க வேண்டாம்! - பழ.கருப்பையா

தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள மைல் கற்களில், ஆங்கிலத்தில் இருந்த ஊர்ப் பெயர்களை அழித்துவிட்டு, இந்தியில் எழுதப்பட்டன. இதற்குத் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் திராவிடக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ''வட மாநிலங்களில் இருந்து லாரி போன்ற வாகனங்களில் வருபவர்கள் சுலபமாகப் படிக்கவே, இந்தியில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் என்ன தவறு?'' என்று குறிப்பிட்டிருந்தார். 

பொன்னாரின் இந்தக் கருத்துக்கு பழ.கருப்பையா, ''வடமாநிலத்தவர்களுக்காக இங்குள்ள மைல் கற்களில் இந்தியில் பெயர் எழுதப்படுவது போல, இங்கிருந்து வடமாநிலங்களுக்கு வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களுக்காக, அங்கே தமிழில் பெயர்கள் எழுதப்படுமா?'' என்று காட்டமாகக் கேட்டுள்ளார். 

மேலும், ''இந்தியாவின் தேசிய மொழிகளாக 18 மொழிகளும் இருக்க வேண்டும். ஒரு மொழி மட்டும்தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உகந்தது அல்ல. வடநாட்டினருக்கு வால்பிடிப்பதை விட்டுவிட்டு, தென் மாநிலத்தவர்கள் பற்றி பொன்.ராதாகிருஷ்ணன் பேச வேண்டும்'' என்று சீறி இருக்கிறார் பழ.கருப்பையா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!