ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளுக்கு 'செக்'- முதல்வர் யோகி அடுத்த அதிரடி!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், யோகா மற்றும் தற்காப்புக் கலைகள் பயிற்சி கட்டாயமாக்கப்பட உள்ளது.

Yogi Adityanath

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், நேற்று கல்வித்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின்போது, இரண்டு முக்கியத் திட்டங்களை விரைவில் செயல்படுத்துமாறு, மாநில கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் யோகா பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும், மாணவிகளுக்கு சுய பாதுகாப்புக் கலைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் (Rani Laxmibai self defence programme) என்னும் இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். 

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தனியாகப் பயிற்சி மையங்கள் வைத்து நடத்துவதற்கு யோகி தடை விதித்துள்ளார். மீறி தனியார் பயிற்சி மையம் வைத்து நடத்தும் அரசு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 

மேலும், அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை அடையாளம் காணவும்  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் யோகி. பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில், உ.பி கல்வி அமைச்சகம் வழிகாட்டு விதிகள் வகுக்க உள்ளன . அதுமட்டுமன்றி நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அனைத்து பல்கலைக்கழங்களிலும் ஒரே மாதிரியான பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தவும் முதல்வர் யோகி வலியுறுத்தி உள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!