வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (05/04/2017)

கடைசி தொடர்பு:14:02 (05/04/2017)

மதுக்கடைகளுக்குத் தடை: பஞ்சாப் அரசின் அதிரடி ப்ளான்!

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையைச் சமாளிக்கும் வகையில், பஞ்சாப் மாநில அரசு தனது தேசிய நெடுஞ்சாலைகளை நகர்ப்புறச் சாலைகளாக மாற்றியமைத்துள்ளது.

ரோடு

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், குறிப்பிட்ட தூர அளவில் மதுக்கடைகள் இருக்கக்கூடாதென உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மதுக்கடை விற்பனைகளால் மட்டுமே கல்லா கட்டும் மாநில அரசுகள் பல, இந்தத் தடையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாயின. இந்தப் பாதிப்பைத் தவிர்க்க தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை நகர்ப்புறச் சாலைகளாக அறிவித்தால், உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவை சாமர்த்தியமாக மீறலாம் என்ற யோசனையை முதலில் ராஜஸ்தான் செயல்படுத்தியது.

ராஜஸ்தானைத் தொடர்ந்து,  பஞ்சாப் மாநில அரசும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இதன்படி, பஞ்சாப்பில் தேசிய நெடுஞ்சாலைகள் 30 கி.மீ. வரை குறைக்கப்பட்டுள்ளன. ’உச்சநீதிமன்றத் தடைக்காக, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அரசின் செயல்படுத்தவேண்டிய திட்டங்களின் பட்டியலில் இருந்த பணிதான்’ என பஞ்சாப் அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதே திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி, 'தமிழக நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் தடையால் பாதிக்கப்பட்டோர்’ ஒன்றிணைந்து, தமிழக அரசிடம் சமீபத்தில் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.