வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (05/04/2017)

கடைசி தொடர்பு:13:46 (06/04/2017)

கேரளக் காடுகளில் அரிய வகை நண்டு கண்டுபிடிப்பு!

கடலிலும் கடலோரங்களிலும் காணப்படும் சாதாரண நண்டுகளைப் போல அல்லாமல், மரங்களில் வாழும் புதுவகை நண்டு ஒன்று கேரளக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

crab

 

நீளமான கால்கள், கடினமான மேல் ஓடு, உறுப்புகள் எல்லாம் சாதாரண நண்டு வகைகளைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டுக் காணப்படும் புதிய வகை நண்டு இனம் ஒன்று, கேரளாவிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இந்தப் புதிய வகை நண்டை அடையாளம் கண்டுள்ளனர்.

2014-ல் நடத்தப்பட்ட ‘நன்னீர் நண்டு வகையினங்கள்’ குறித்து நடத்தப்பட்ட சர்வேயில், இந்த அரிய வகை நண்டு இனம் கண்டறியப்பட்டுள்ளது. சாதாரண நண்டு வகைகளைப் போல அல்லாமல், மரங்களிலும் அதில் உள்ள துளைகளிலும் இந்த நண்டுகள் வாழ்கின்றன. 2014-ம் ஆண்டு சர்வேயில் அறிமுகமான இந்த நண்டு வகையைப் பல நாள்களாகத் தேடிக் கண்டுபிடித்து, ஆய்வாளர்கள் பதிவுசெய்துள்ளனர்.

இந்த மாதிரியான உயிரினங்களை அடையாளம் கண்டுகொள்ளும்போது, நமது காடுகளையும் அங்கு வாழும் உயிரினங்களையும்  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளதாக, அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.