வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (07/04/2017)

கடைசி தொடர்பு:11:12 (07/04/2017)

ஏழு வருடங்கள் கழித்து இந்தியா வருகிறார் ஷேக் ஹசீனா

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியா வருகிறார். நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வரும் இவர், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று சந்திக்கிறார். அதற்குப் பின், அவர் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

hasina

2010ல் இந்தியா வந்த வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, ஏழு வருடங்கள் கழித்து, நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். ராஷ்ட்ரபதி பவனில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அவர் சந்தித்து, இரு நாட்டு வெளியுறவுக் கொள்கைகள் குறித்து விவாதிக்க இருக்கிறார். இதையடுத்து, அவர் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் ஹசீனா-மோடி முன்னிலையில் கையெழுத்தாக உள்ளன.

மேலும், வங்கதேசம்- மேற்குவங்கம் இடையே பாயும் டிஸ்டா ஆறு தொடர்பான பேச்சுவார்த்தையில், மம்தா பானர்ஜி கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அனைத்து சந்திப்புகளையும் முடித்துக்கொண்டு, திங்களன்று வங்கதேசம் திரும்புகிறார், ஷேக் ஹசீனா.
சமீபத்தில், வங்கதேசம் சென்ற பிபின் ராவத்தை சந்தித்த ஷேக் ஹசீனா, 'இந்தியாவை அழிக்க குறிவைக்கும் எவருக்கும் வங்கதேசம் இடமளிக்காது' எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.