வெளியிடப்பட்ட நேரம்: 03:26 (08/04/2017)

கடைசி தொடர்பு:03:25 (08/04/2017)

கேரள பள்ளி, கல்லூரிகளில் மலையாளம் கட்டாயம்!

கேரள மாநிலத்தின் பள்ளி மற்றூம் கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்குத் தாய்மொழியான மலையாளத்தில் சரிவர எழுத தெரியவில்லை என்று அங்குள்ள கல்வியாளர்கள் மாநில அரசிடம் புகார் தெரிவித்து இருந்தனர். அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில், 'அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கட்டாயம் மலையாளம் கற்பிக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கேரள பள்ளி

கேரளாவில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மலையாளம் கற்றுக்கொடுக்க வேண்டும். தாய்மொழியான மலையாளத்தை அனைவரும் விரும்பிப் படிக்க வேண்டும்.  ஆங்கில வழி பள்ளிக்கூடங்களிலும் கட்டாயம் மொழி பாடமாக மலையாளம் இடம்பெற வேண்டும்.  இந்தி கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டும் மத்திய கல்வி வாரிய பள்ளி மாணவர்கள்,  மலையாளம் கற்பதில்லை என்று புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார்கள். 
இனிமேல், கேரள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் மலையாளம் தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அரசு வேலை வாய்ப்புகளின்போது மலையாளத்தில் விண்ணப்ப படிவத்தை நிரப்ப தெரிந்திருக்க வேண்டும். மலையாளம் தெரிந்தவர்களுக்கே அரசு வேலை வாய்ப்பும் வழங்கும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க