விமான சர்ச்சையில் திரிணாமுல் எம்.பி: காங்கிரஸ் அட்வைஸ்!

எம்.பிக்கள் தங்கள் அகங்காரத்தை குறைத்து கொண்டு, தேசிய பணியை நினைத்து பார்க்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சரண் சிங் சாப்ரா கூறியுள்ளார். 

டெல்லி - கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டோலா சென் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவசர வழிப்பாதையில் சீட் இருப்பதால் டோலா சென்னின் தாயை மாறி உட்காருமாறு ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த டோலா சென் செய்த ரகளையால் விமானம் 30 நிமிடம் தாமதமானது. 

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் சரண் சிங் சாப்ரா 'எம்.பிக்கள் அவர்கள் அகங்காரத்தை குறைத்து கொண்டு தேசிய பணியை நினைத்து பார்த்து நடந்துகொள்ள வேண்டும்' என கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மீம் அஃப்சல் கூறுகையில், 'விமான பயணங்களில் எம்.பி-க்கள் மரியாதையுடன் அமைதி காக்க வேண்டும். கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்களை நானும் சந்தித்திருக்கிறேன். ஒரு போதும் கோபப்பட்டு இதை செய்தியாக்க முயற்சித்ததில்லை' என கூறியுள்ளார்.


சமீபத்தில் எம்.பி-க்கள் விமான பயணங்கள் தொடர்ந்து சர்ச்சையாக்கப்பட்டு வருகின்றன. ஏர் இந்தியா ஊழியரை தாக்கியதாக சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!