வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (08/04/2017)

கடைசி தொடர்பு:10:26 (08/04/2017)

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்தியர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் மீண்டும் ஒரு இந்தியர் சுட்டு கொல்லப்பட்டார். 

indian gun shot

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள பெட்ரோல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் பஞ்சாபை சேர்ந்த விக்ரம் ஜார்யால். இவரை இரண்டு முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி பணத்தை கேட்டனர். பணத்தை தந்த பின்பும் முகமூடி கொள்ளையர்கள் அவரை சுட்டு கொன்றுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

துப்பாக்கிசூட்டில் காயமடைந்த ஜார்யால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதை வைத்து கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது. இதையடுத்து உயிரிழந்த ஜார்யாலின் சகோதரர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வாராஜின் ட்விட்டர் பக்கத்தில் சம்பவம் குறித்து தெரிவித்தார்.

அதில், தன் சகோதரரை இந்தியா கொண்டுவர உதவுங்கள் என அவர் கோரிக்கைவிடுத்தார். இதையடுத்து வெளியுறவுத்துறை சார்பில் ஜார்யாலின் உடலை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.