உத்தரகண்ட் இறைச்சிக் கூடங்களில் சோதனை

உத்தரகண்டில் இறைச்சிக் கூடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. முறையான உரிமம் பெற்று சட்டத்தின்படி இறைச்சிக் கூடங்கள் இயங்குகிறதா என மாவட்ட அதிகாரிகளும், காவல் துறையினரும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

cow

வடமாநிலங்களில் இறைச்சிக் கூடங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் உரிமம் இல்லாத இறைச்சிக் கூடங்களை மூடவேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இதையடுத்து ஜார்கண்ட், சட்டிஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் இறைச்சிக் கூடங்களுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டன. இந்நிலையில், உத்தரகண்டில் மாவட்ட அதிகாரிகள் தலைமையில் சோதனை நடந்துள்ளது. முறையான உரிமம் பெற்று இயங்குவதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என அவர்கள் சோதனை மேற்கொண்டனர். உரிமம் இல்லாமல் இயங்கும் இறைச்சிக் கூடங்களை மூட உத்தரகண்ட் அரசு உத்தரவிட்டிருந்ததை அடுத்து இந்த சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உரிமம் பெற்று இயங்குபவர்களையும், அரசாங்க அதிகாரிகள் தொல்லை செய்வதாக இறைச்சிக் கூடங்களின் உரிமையாளர்களின் தரப்பில் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!