‘முத்தலாக்' முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சல்மா அன்சாரி | Vice President Ansari's wife critized "Triple talaq"

வெளியிடப்பட்ட நேரம்: 21:37 (08/04/2017)

கடைசி தொடர்பு:21:37 (08/04/2017)

‘முத்தலாக்' முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சல்மா அன்சாரி

மூன்று முறை 'தலாக்' என்று சொல்வதாக மட்டும் தலாக் நடைமுறை இருக்கக் கூடாது என்று துணைக் குடியரசுத்தலைவர் ஹமீது அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் 'தலாக்' விவகாரத்து விவகாரம் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய திருமண முறையில் இருந்து விவகாரத்து பெறுவதற்கு மூன்று முறை 'தலாக்' என்று கூறினால் மட்டும் போதுமானது. இந்த முறையை பின்பற்றுவதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடர்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக போனில் எஸ்.எம்.எஸ்ஸில் 'தலாக்' என்று விவகரத்து பெறுவதும் தபாலில் 'தலாக்' என்று அனுப்பி விவாகரத்து பெறுவதும் நடைபெற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்தன.

இந்த நிகழ்வுகள் தலாக் முறை மீது கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது. இந்த நிலையில் 'தலாக்' குறித்து கருத்து தெரிவித்த சல்மா அன்சாரி, 'மூன்று முறை 'தலாக்' என்று சொல்வதாக மட்டும் 'தலாக்' நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.

குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்' என்று கூறியுள்ளார்.


[X] Close

[X] Close