தேர்தல் சீர்த்திருத்தம் அவசியம் - சொல்கிறார் பிரணாப் முகர்ஜி

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசு  தலைவர் பிரணாப் முகர்ஜி, ''தற்போதுள்ள நாடாளுமன்ற மக்களவை இடங்கள் 1971-ம் ஆண்டின் மக்கள்தொகையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 55 ஆண்டுகளில் மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதற்கு ஏற்றாற்போல, மக்களவையின் இடங்களை அதிகரிக்க வேண்டும். அரசமைப்பு சட்டத்தின் 42 -வது திருத்தத்தின் மூலம் 1971-ம் ஆண்டு மக்கள்தொகையை  அடிப்படையாகவைத்து தொகுதிகளை வரையறை செய்தனர்.  2001-ம் ஆண்டில் 84-வது சட்டத்திருத்தத்தின் மூலமாக அதேநிலையை 2026-ம் ஆண்டு வரை நீடிக்கச் செய்தனர்.

 

பிரணாப் முகர்ஜி
 

நாடாளுமன்றம் விவாதிக்கின்ற இடமல்ல; முடிவுகளை எடுக்கின்ற இடம். தேவையான நேரத்தில் தேவையான தேர்தல் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். இப்போதைய சூழ்நிலையில், மக்களுக்கும் அரசமைப்பு சட்டத்துக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், தேர்தல் சீர்திருத்தங்களை உடனே செய்ய வேண்டும். தற்போதைய தேர்தல் அமைப்பு செயல்படுவதில் உள்ள குறைகளை உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காமல் அலசி ஆராய வேண்டும். அது காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப நமது நாட்டுக்கு அவசியம்'' என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!