ஈவ்டீசிங்கில் ஆரம்பித்து கல்யாணத்தில் முடிகிறது - சினிமா குறித்து மேனகாகாந்தி!

கோவாவின் பனாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி  ஒன்றில் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர்  மேனகா காந்தி, ''கடந்த ஐம்பது வருடங்களாக இந்தி உள்பட அனைத்து மாநில திரைப்படங்களிலும் லவ்தான் பிரதான விஷயமாக இருக்கிறது. திரைப்படங்களில் காதல் என்பது  எப்போதும் ஈவ் டீசிங்கில் ஆரம்பிக்கிறது. பின்னர், படிப்படியாக கல்யாணத்தில் போய் முடிகிறது. சரி என்று நியாப்படுத்தும் இந்த வன்முறைகள், ஒருவகையான கொடுமைப்படுத்துதல் என்பதை மறக்கக் கூடாது.

மேனகா காந்தி


கதாநாயகனும் அவரது நண்பர்களும் ஒரு பெண்ணை சுற்றிவருவர்.  முறையற்ற வகையில் அந்த நபர் பெண்ணை சீண்டுவதும், தொடுவதும் பின்னர் மெல்ல மெல்ல அந்தப் பெண் அவர் மீது காதல்கொள்வதும், அதன்பின் மீதமுள்ள கதையில், சிலருடன் அவர் சண்டைப் போட்டு பெண்ணை அடைவதும் என இருக்கும். இதுதான் இந்திய சினிமாவின் பொதுவான கதை அமைப்பு. 1950-களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையையே இப்போதும் பின்பற்றுகிறார்கள். ஏதோ ஒரு வகையில் பெண்களுக்கு எதிராகவே இந்த ஊடகங்கள் இருக்கின்றன. ஆணாதிக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில்தான் சினிமாக்கள் தயாராகிறது. அதில் மாற்றம் வேண்டும்'' என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!