சட்டிஸ்கரில் தீ விபத்து , வாகனங்கள் கருகின

சட்டிஸ்கர் மாநிலம் ராய்பூரில் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. 

ராய்பூர் ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் வாகன நிறுத்தத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் நிறுத்துமிடத்தில் இருந்த 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகின. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கைக்கு பின் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையர் அனந்த் குமார் கூறுகையில் 'தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. 200-க்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்' என கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!