வெளியிடப்பட்ட நேரம்: 07:39 (10/04/2017)

கடைசி தொடர்பு:12:35 (10/04/2017)

உ.பி., எஸ்பிஐ கிளையில் கறுப்புப் பணத்தை மாற்ற 2000 போலிக் கணக்குகள்!

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பின்னர்,  உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளையொன்றில், கறுப்புப் பணத்தை மாற்றுவதற்காக, 2000-க்கும் மேற்பட்ட புதிய வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

SBI black money
 

கடந்த ஜனவரி மாதம், உ.பி-யில் உள்ள பரேலி நகர (Bareilly) எஸ்பிஐ  கிளையில், சிபிஐ அதிகாரிகள் திடீரெனச் சோதனை மேற்கொண்டனர். ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், அதாவது  2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதிக்குப் பின்னர், அங்கு 2,000-க்கும் மேற்பட்ட போலிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. அந்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை வெள்ளையாக்கி உள்ளனர். இதற்கு, வங்கி அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பான வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவுசெய்துள்ளது. 

புதிய கணக்குகள் தொடங்கியது மட்டுமல்லாமல் ஏற்கெனவே செயல்படாமல் இருந்த கணக்குகளையும் (dormant accounts) கறுப்புப் பணத்தை மாற்ற பயன்படுத்திக்கொண்டதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது. 2000க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்யும் பணியில் சி.பி.ஐ முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க