ராணுவ வீரர்களுக்காக ஒரு ‘மொபைல் ஆப்’- கண்ணீருடன் வெளியிட்ட அக்‌ஷய் குமார்!

ராணுவ வீரர்களுக்குப் பயன்படும் வகையில், தனது நீண்ட நாள் கனவான ‘மொபைல் ஆப்’ ஒன்றை நடிகர் அக்‌ஷய் குமார் கண்ணீர் மல்க வெளியிட்டார்.

AKSHAY


ராணுவ வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் உதவும் வகையில், ‘பாரத் கே வீர்’ (இந்தியாவின் வீரர்கள்) என்ற புதிய இணையதளப் பக்கமும், ‘மொபைல் ஆப்’ ஒன்றும் நடிகர் அக்‌ஷய் குமாரால் டெல்லியில் வெளியிடப்பட்டது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ‘வீரத் திருநாள்’ நிகழ்ச்சியின்போது, தனது கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார் அக்‌ஷய்.


'இந்த இணைய பக்கம், மொபைல் ஆப் ஆகியவை மூலம் பெறப்படும் ஒவ்வொரு ரூபாயும், ராணுவத்தில் நாட்டுக்காகத் தியாகம் செய்யும் ஒவ்வொரு வீரரின் குடும்பத்துக்கும் பயனளிக்கும்', என அக்‌ஷய் குமார் கூறினார்.


தீவிரவாதம் குறித்த ஒரு ஆவணப்படம் பார்த்தபோதுதான், நம் நாட்டுக்காகப் பல தியாகங்களைச் செய்யும் வீரர்களுக்கு உதவும் வகையில், இந்த முயற்சியில் இறங்கியதாகக் கூறும் அக்‌ஷய், மூன்று மாத காலத்தில் இந்தப் பணியை முடித்துள்ளார். 


சமீபத்தில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அக்‌ஷய் குமார் தனது ‘ரஷ்டம்’ படத்துக்காகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!