வெளியிடப்பட்ட நேரம்: 06:11 (11/04/2017)

கடைசி தொடர்பு:15:32 (16/11/2017)

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை: பணப்புழக்கம் 26% குறைந்தது!

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, பணப்பறிமாற்றங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை காலக்கட்டத்துக்கு பின் பணப்புழக்கம் 26 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆர்.பி.ஐ கூறியுள்ளது. குறிப்பாக, இந்த அறிவிப்புக்கு முன் 17.97 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது.


ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 13.23 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள்தான் புழக்கத்தில் உள்ளதாக ஆர்.பி.ஐ கூறியுள்ளது. அதேபோல் ஏ.டி.எம்களில் பணம் எடுப்பதன் அளவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை, ஆர்.பி.ஐ கடந்த மார்ச் 13-ம் தேதியுடன் தளர்த்தியது. 


இதற்கு பிறகுதான் ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும் அளவு வெகுவாக குறைந்துள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.