முப்பது ரூபாய் கடன் அன்பை முறிக்கவில்லை..உயிரை பறித்துவிட்டது!

ஹைதராபாத்தில் 30 ரூபாய் கடனை திரும்பக் கேட்டபோது ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Man killed
 

மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ராஜு என்பவர்  ஹைதராபாத்தில் உள்ள ஹபிஸ் பாபா நகரில் தங்கி,  அங்கு ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். ராஜு, அதே பகுதியில் மற்றொரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் என்பவரிடம் 30 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.

கமலேஷ் நேற்று தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டுள்ளார். அப்போது ராஜுவிடம் தான் கடனாகக் கொடுத்த 30 ரூபாய் பணத்தைத் திரும்பத் தருமாறு கமலேஷ் கேட்டுள்ளார். இதில் இருவருக்கிடையே வாக்குவாதம் வலுத்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. முடிவில் கமலேஷ் ராஜுவை கீழே தள்ளிவிட்டார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காவல்துறை கமலேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!