வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (11/04/2017)

கடைசி தொடர்பு:09:31 (11/04/2017)

#ALERT இனி போதையில் வண்டி ஓட்டினால் அபராதம் ரூ.10,000, ஹெல்மெட் இல்லை என்றால் ரூ.1000... 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றால் விதிக்கப்படும் அபராதம் நூறு ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Motor Vehicles Amendment Bill 2016
 

’மோட்டார் வாகனச் சட்டம் 1988’, சில திருத்தங்களுடன், சட்டத்திருத்த மசோதாவாக நேற்று  மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் தரப்பு காப்பீடு, டாக்சி சேவைகளுக்கான ஒழுங்கு நடைமுறைகள், சாலைப் பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் முக்கிய திருத்தங்களுடன் தற்போதைய மோட்டார் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகனச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் :

*போதையில் வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  

*ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றால் விதிக்கப்படும் அபராதம் நூறு ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


*ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடாமல் சென்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம்.

 
*விபத்தில் பலியானோருக்கு பத்து லட்சம் ரூபாய் வரை இழப்பீடும், விபத்துகளில் காயமடைவோருக்கு ஐந்து லட்சம் ரூபாய்  இழப்பீடும் வழங்கப்படும்.


*டாக்சி நிறுவன சேவை தொடர்பானவைகள் அத்தனையும் இனி மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.

*ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு என அனைத்துக்கும் ஆதார் கட்டாயப்படுத்தப்பட உள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க