Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டுமா...?!" #VikatanSurvey

வாக்குச்சீட்டு Vs மின்னணு வாக்குப்பதிவு

தேர்தல் என்றாலே வெற்றி, தோல்வி என்பதை கணிக்க முடியாத நிலைதான் இன்றும் நிலவுகிறது. கடைசி நேரத்தில் மக்கள் யாருக்கு வாக்களிக்க நினைக்கிறார்களோ, அவர்களுக்கே வாக்களிப்பார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் குறைந்த வாக்குகள் அதிகம் பெற்றாலும், அதாவது ஓரிரு வாக்கு கூடுதலாகப் பெற்றாலும், அவரே வெற்றிபெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படுவார். பெரும்பான்மை உறுப்பினர்கள் அடிப்படையில் அரசியல்கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் ஜனநாயக முறையே பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகள் ஆட்சியமைப்பதில் மும்முரம் காட்டினாலும், தோல்வியடையும் கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்று குற்றம்சாட்டத் தொடங்கி விடுகின்றன.மேலும், இந்தியாவில் முன்பிருந்த மாதிரி, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அண்மைக்காலமாக பல அரசியல்கட்சிகளும் முன்வைக்கத் தொடங்கியுள்ளன. ஈ.வி.எம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பே இல்லை என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து தெரிவித்தாலும், அதனை அவ்வப்போது அரசியல்கட்சிகள் மறுத்து வருகின்றன.

தேர்தலில் ஈ.வி.எம்-களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்ற கருத்து பரவலாக நீடித்துவருவது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை இந்த சர்வேயில் கலந்து கொண்டு பதிலளியுங்கள்...

"தேர்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறை வேண்டுமா...?!" #VikatanSurvey

Survey about Electronic Voting Machine

1). மீண்டும் வாக்கு சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறதே...நீங்கள் அதை ஆதரிக்கிறீர்களா? *

2). மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேட்டிற்கு சாத்தியம் உள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா? *

3). மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், கள்ள ஓட்டுகள் குறைந்துள்ளதாக நினைக்கிறீர்களா? *

4). ஈ.வி.எம்-களில் வாக்களிப்பது குறித்து கிராமப்புற மக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளதாகக் கருதுகிறீர்களா? *

5). மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி இருப்பதாக எழும் வாதங்கள் பற்றி உங்கள் கருத்தை ஓரிரு வரிகளில் தெரிவிக்கவும்..... *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

 

 - நந்தினி சுப்பிரமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement