'தன் தனா தன்' - பலே ராஜதந்திரி ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ, தன்னுடைய புது ஆஃபர் ‘தன் தனா தன்’ திட்டத்தைப் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

jio

 

ஜியோவின் ‘சம்மர் ஆஃபர்’, சில பல காரணங்களால் காணாமல் போனாலும், தனது ராஜ தந்திரத்தால் புதுப் பெயரில், பலே திட்டங்களுடன் மீண்டும் ஜியோவின் சேவைகள் தொடர உள்ளன.

 ஜியோவின் அதிரடித் திட்டங்களுக்கு ரசிகர்கள் கோடி. இப்போது வரை தனது வாடிக்கையாளர்களை பெரிதாக ஏமாற்றாத ஜியோ, தன்னுடைய அடுத்த அதிரடியாக, ‘தன் தனா தன்’ என்ற புதிய ஆஃபர் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புது திட்டம், ரூ.309 மற்றும் ரூ.509-க்கு வழங்கப்படுகிறது.

மேலும், புதிதாக சேரும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.408 மற்றும் ரூ.608-க்கு ஜியோவின் அத்தனை சேவைகளும் வழங்கப்பட உள்ளது. ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.309-ல் நாள் ஒன்றுக்கு 1ஜிபி வீதம் மூன்று மாதங்களுக்கும், ரூ.509-ல் ஒரு நாளைக்கு 2ஜிபி வீதம் வழங்கப்படும். மேலும், மூன்று மாதங்களுக்கு ஜியோவின் இலவச போன் கால்கள், குறுஞ்செய்திகள், ஜியோ ஆப்ஸ் என அத்தனை சேவைகளும் இந்தத் திட்டத்திலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ம் தேதிக்குள், வாடிக்கையாளர்கள் இணைவதற்கான கால அவகாசமும் தரப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!