கேரள மாநிலம், மலப்புரம் இடைத்தேர்தலில்... விறுவிறுப்பாக நடந்துவரும் வாக்குப்பதிவு!

 

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மக்களவைத் தொகுதியில், இன்று காலை முதல் ஓட்டுப்பதிவு நடந்துவருகிறது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பிரதானமாக, முஸ்லிம் லீக் வேட்பாளராக குஞ்சாலிக் குட்டி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஃபைசல், பா.ஜ.க சார்பில் ஸ்ரீபிரகாஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இந்த இடைத்தேர்தலுக்கு 1,100 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் அஹமத் இறந்த பின்பு, இந்த மக்களவைத் தொகுதி காலியானது. இதையடுத்து, இன்று இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. 

கிட்டத்தட்ட 13 லட்சம் வாக்களர்கள் இந்த இடைத்தேர்தலில் ஓட்டுப் போடுகிறார்கள்.

Photo Courtesy : ANI

Do you like the story?

Please Appreciate the Author by clapping!