வெளியிடப்பட்ட நேரம்: 09:17 (12/04/2017)

கடைசி தொடர்பு:09:17 (12/04/2017)

'சத்தீஸ்கரில் விரைவில் மதுவிலக்கு!'- முதல்வர் ராமன் சிங் தகவல்

சத்தீஸ்கர் மாநிலத்தில், விரைவில் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று அந்த மாநில முதல்வர் ராமன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், 'மதுவிலக்கு நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டிருக்கிறோம். முன்னர், மது விற்பனையில் ஈடுபட்டிருந்த இடைத்தரகர்கள் மற்றும் இடைநிலை ஆட்களை நாங்கள் அகற்றிவிட்டோம். மதுவிலக்கின் முதற்கட்டமாக, சத்தீஸ்கரில் 3000 நபர்களுக்கு மேல் இருக்கும் கிராமங்களில், தற்போது மது விற்பதை நிறுத்திவுள்ளோம்' என்று கூறியுள்ளார்.

சத்தீஸ்கரில், இம்மாதம் 1-ம் தேதி முதல், மதுபானங்களை அரசே விற்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அந்த மாநிலத்தில் அமல்படுத்திய பூரண மதுவிலக்குக்குப் பிறகு, மக்கள் ஆதரவைப் பார்த்துதான்,  சத்தீஸ்கரிலும் மதுவிலக்கு கொண்டுவருவதில் முனைப்போடு இருக்கிறார், ராமன் சிங் என்று கூறப்படுகிறது.