வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (12/04/2017)

கடைசி தொடர்பு:10:48 (12/04/2017)

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் கைது செய்யப்படுகிறார்கள்?

டெல்லி ஐந்தர் மந்தர் பகுதியில், கடந்த 30 நாள்களாக, காவிரி மேலாண்மை அமைப்பது, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வருகின்றது.

மண்டை ஓடுகளுடன் தொடங்கிய விவசாயிகள் போராட்டம், ஒரு மாதமாக பல்வேறு விதமாகப் பரிணமித்து, சில நாள்களுக்கு முன்னர் நிர்வாணப் போராட்டமாக வெடித்தது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தங்களைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில், 'தமிழக விவசாயிகள் இன்று கைது செய்யப்படலாம்' என்று தகவல்கள் வந்துள்ளன. நேற்று இரவு அவர்களை போலீஸ் தரப்பு மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.