வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (12/04/2017)

கடைசி தொடர்பு:11:06 (12/04/2017)

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு எதிரொலி! வித்யாசாகர் ராவிடம், தி.மு.க புகார்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ம் தேதி அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரொக்கம் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டோர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவை மும்பையில் சென்று சந்திக்க உள்ளனர்.