தங்கத்தைப் போன்று பெட்ரோல், டீசல் விலையும் தினந்தோறும் நிர்ணயம்! அதிர வைக்கும் பெட்ரோலிய நிறுவனங்கள்

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முறை மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ராேலிய நிறுவனங்களின் செயலில் தலையிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Petrol price
 

அதாவது தங்கம் விலை நிர்ணயிக்கப்படுவது போல் பெட்ரோல், டீசல் விலையையும் நிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த திட்டத்தை முதல்கட்டமாக, ஐந்து நகரங்களில் மட்டும் அமல்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், ஜாம்ஷெத்பூர், சண்டிகர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

பெட்ரோல் டீசல் விலையை தினமும்  மாற்றி அமைப்பதற்கு எண்ணெய் நிறுவனங்கள் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்தன. இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானை எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் அண்மையில் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு குறித்து அதிகாரிகள் தனியார் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில், 'சர்வதேச அளவில் தினமும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைப்பது என விவாதிக்கப்பட்டது. இந்த செயல்முறை முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று தான். தற்போது, அதற்கான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. எனவே, இதனை இப்போது செயல்படுத்த முடியும்' என்று தெரிவித்தனர். அதன்படி தற்போது இந்த திட்டத்தை ஐந்து நகரங்களில் மட்டும் செயல்படுத்தி உள்ளனர். 

எண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,’இந்த முடிவில் மத்திய அரசு தலையிட முடியாது”, என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!