Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துகளில் அதிகாரிகளை தண்டிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

சாலைகளின் மோசமான நிலைகளால் ஏற்படும் சாலை விபத்துகளில் பொதுவாக எல்லா அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

SC

சாலை விபத்து தொடர்பாக சண்டிகரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. அந்த மனுவில், சாலை விபத்துகளுக்கு மோசமான சாலை அமைப்பும், பராமரிக்காததே காரணம். சாலை விபத்துக்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே காரணம். அவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதேபோன்று மனுவை ஒன்றையும் அந்த தொண்டு நிறுவனம், ஹரியானா உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த இருமாநில உயர்நீதிமன்றங்கள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அந்த தொண்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளபடி செய்த உச்சநீதிமன்றம், குறிப்பிட்ட ஒரு சாலையில் ஏற்பட்ட விபத்து மோசமான சாலையால்தான் நிகழ்ந்தது எனக் குறிப்பிட்டால் மட்டும்தான் சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் பொதுவாக எல்லா சாலை விபத்துகளுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தண்டிக்க முடியாது. இம்மாதிரியான புகார்களை இனிமேல் அதிகாரிகளிடமே தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு தடை வாங்கிக்கொடுத்த அதே தொண்டு நிறுவனம் தான் இந்த வழக்கையும் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close