’ஸ்கூப் வூப்’ தளத்தின் இணை நிறுவனர் மீது பாலியல் குற்றச்சாட்டு

இணைய தளங்களில் செய்திகள் வழங்குவதில் இளைஞர்களை என்றுமே கவர்ந்த தளமாகக் கூறப்படும் ‘ஸ்கூப் வூப்’ தளத்தின் இணை நிறுவனர் மீது முன்னாள் ஊழியர் புகார் அளித்துள்ளார்.

scoopwhoop


‘ஸ்கூப் வூப்’ இணையதளப் பக்கத்தின்  இணை நிறுவனர் சுபான் பாண்டே மீது அவரது நிறுவனத்தின் முன்னாள் ஊழியரே பாலியல் தாக்குதல் புகார் அளித்துள்ளார். குற்றத்துக்கு துணை புரிந்ததாகவும் அதை மறைக்க முயன்றதாகவும் அந்நிறுவனத்தின் மேலும் இரண்டு இணை நிறுவனர்களான சாத்விக் மிஸ்ரா, ஸ்ரீபர்னா திகேகர் ஆகியோர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்கூப் வூப்’ நிறுவனத்தில் 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மூத்த நிர்வாகியாகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர் இந்தப் புகாரினை அளித்துள்ளார். தற்போது, பாலியல் தாக்குதல் குற்றம்சாட்டப்பட்ட சுபான் பாண்டே முன்ஜாமீன் கேட்டுள்ளார். இதை நிராகரித்த நீதிமன்றம், கைது செய்வதற்கு ஐந்து நாள் முன்பே தகவல் தெரிவித்துவிட்டு கைது செய்யலாம் என போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளது.

நிறுவனத்தின் இணை நிறுவனர் மீதான புகார் குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை நிர்வாகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பாதிக்கப்பட்டவருக்கு நியாயமான முறையில் தீர்ப்பு கிடைக்கும். அதற்கான முழு ஒத்துழைப்பையும் நிர்வாகம் வழங்கும்’ என தெரிவித்துள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!