தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையா..? மக்கள் கருத்து என்ன?! #VikatanSurveyResults⁠⁠⁠⁠

வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் கட்சிகள்

ந்தியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே அனைத்து மாநில சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகளுக்குப் பிரச்னையில்லை. ஆனால், தோல்வியடையும் கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன, எனவே மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், "தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டுமா...?!" என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயில் பலரும் கலந்துக் கொண்டு பதிலளித்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை ஆதரித்துள்ளனர். மேலும், சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மக்கள் அளித்த பதில்களும் கீழே...

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி இருப்பதாக எழும் வாதங்கள் பற்றி உங்கள் கருத்தை ஓரிரு வரிகளில் தெரிவிக்கவும்...

*மீண்டும் வாக்கு சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும்.

*சரியான புரிதல் இல்லாமல் பிதற்றுகிறார்கள்.

*அந்த மென்பொருள் எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்.

*மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புகள் அதிகம் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள கூடியது .

*avoiding EVM is going back Stone Age. Find the faults and correct it.

*நிச்சயமாக மறுபரிசீலனை செய்து,பழையபடி ஓட்டுசீட்டு முறையே நடைமுறைப்படுத்த வேண்டும்.

*அரசியல் கட்சி விசுவாசியாக இல்லாமல், அரசாங்க விசுவாசியாக இருக்க வேண்டும்.

*தோல்விக்கான ஒரு காரணமாக நம்பவைக்க ஆடும் நாடகம்.

*ஆளும் அரசுகளுக்கு சாதகமாக நடந்துகொள்ளும் தேர்தல் ஆணையம், ஒரு கட்சிக்கு ஆதரவாக EVMயை மாற்றி அமைக்காது என்பது என்ன நிச்சயம்?!

*மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய ஒரு போட்டி வைத்தால் உண்மை வெட்டவெளிச்சமாகும் என்பதில் சந்தேகமே இல்லை!

*சந்தேகம் உள்ளபடியால் மாற்றம் தேவை.

*மின்னனு வாக்கு எந்திரம் என்பது ஆளுங்கட்சி சொல்லுறததான் கேட்கும்...

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.

 - நந்தினி சுப்பிரமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!