Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹெவி வெய்ட் டு ஸ்லிம் ஃபிட்: 15 கிலோ குறைந்த மத்தியப்பிரதேச போலீஸ்!

மத்தியப்பிரதேசத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர், டவுலத்ராம் ஜோகவாத். இவர், கடந்த 1993-ம் ஆண்டு, ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.  அந்த அறுவை சிகிச்சையின் விளைவாக, ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தால், இவரது உடல் எடை சகட்டு மேனிக்குக் கூடியது. 182 கிலோ எடையுடன் வலம் வந்துகொண்டிருந்தார்.


இந்த நிலையில், அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இவரைப் பார்த்த எழுத்தாளர் ஷோபா டே, இவரை, 'கனரக பந்தோபஸ்து' எனக் கிண்டல் அடித்தார். இதுகுறித்து ஷோபா ட்வீட் செய்ய, நெட்டிசன்களும் தங்களது பங்குக்கு அவரை கலாய்த்து எடுத்தனர். இதைத்தொடர்ந்து, டவுலத்ராமுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.


 அறுவை சிகிச்சையின்மூலம், அவர் ஒரே மாதத்தில் 15 கிலோ குறைந்துள்ளார்.  அறுவை சிகிச்சை முடிந்த மூன்று நாள்களில் பணிக்குத் திரும்பியுள்ளார். இது குறித்து அவர், "எடை குறைந்ததன்மூலம், உடலில் பல பிரச்னைகள் குறைந்ததுபோல உணர்கிறேன். மருத்துவர்கள் கூறிய டயட்களைப் பின்பற்றிவருகிறேன்" என்றார். இந்த ஆண்டுக்குள் 100 கிலோவுக்குக் கீழ் எடை கொண்டு வர வேண்டும் என்பது டவுலத்ராமின் டார்கெட்டாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close