Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மம்தா பானர்ஜி தலைக்கு ரூ.11 லட்சம்: பி.ஜே.பி தலைவர்மீது போலீஸில் புகார்!

மேற்குவங்கத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில், ஹனுமன் ஜெயந்தியையொட்டி ஹிந்துத்துவா அமைப்புகள் பேரணி நடத்தியது. பேரணியைக் கலைக்க, மேற்கு வங்க காவல்துறை தடியடி நடத்தியது.  ’பாரதிய ஜனதா யுவ மோர்சா’ அமைப்பின் இளைஞரணித் தலைவர் யோகேஷ் வர்ஸ்னே, போலீஸார் தடியடி நடத்தியதுகுறித்துப் பேசுகையில், “மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஹிந்துத்துவ அமைப்புகள் நடத்தும் பேரணிகளைத் தடியடி நடத்திக் கலைப்பதையே வாடிக்கையாகக்கொண்டுள்ளது” என்றார்.


மேலும், ’மம்தா பானர்ஜியின் தலையைக் கொண்டுவருபவருக்கு, ரூ11 லட்சம் தருகிறேன்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். யோகேஷ் வர்ஸ்னேவின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 


இதையடுத்து, தனக்கு பயமில்லை என்றும் தன்னை யாரும் பயமுறுத்த முடியாது என்றும், மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்த நிலையில், மஞ்சுஶ்ரீ என்ற திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர், யோகேஷ் வர்ஸ்னே மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். கொல்கத்தாவில் 83-வது வார்டு கவுன்சிலரான மஞ்சுஶ்ரீ, மம்தா பானர்ஜி வசிக்கும்  பகுதியில்தான் வசித்துவருகிறார்.


கலிகாட் காவல்நிலையத்தில், இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement